இராமநாதபுரம் மாவட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம் தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள்,  தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக மாவட்ட துணை செயலாளர் கணேஸ் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தங்களின் கோரிக்கைகளான ஒரு பள்ளியில் ஒரு முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு போதிய பாடவேலைகளை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்றால், அவர் தான் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமே தவிர,  அப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் அல்ல, இந்த பழி வாங்கும் போக்கை கண்டித்தும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 ஆக மாற்றி அதன் அடிப்படையில் ஆசிரியர்களை கணக்கிடு செய்ய வேண்டும் எனவும்,  2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தபட்டவர்களுக்கு பணி வரன்முறை செய்து பணப்பலன்களை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!