எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பர்.அந்த இறைவனுக்கு ஒப்பான ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாப்பட்டது.காலை இறைவணக்கத்தின் பள்ளித்தலைமை ஆசிரியர் மதன்பிரபு ஆசிரியர் தினம் சிறப்புரையாற்றினார்.இதன் பின் வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கின.வகுப்பறைக்கு சௌ;ற ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.பள்ளி மாணவ மாணவியர் தங்கள் பாக்கெட் மணியிலிருந்து சேர்த்து வைத்த காசில் தங்களால் முடிந்த பேனா வாழ்த்து மடல் போன்ற சிறு பொருட்களை பரிசுப்பொருட்களாக வாங்கி ஆசிரியர்களுக்கு அளித்தனர்.பின் தலைமை ஆசிரியர் மதன்பிரபுக்கும் வரிசையாகச் சென்று பரிசுப் பொருட்களை வழங்கினர்.அதனை பெற்றுக்கொண்ட தலைமைஆசிரியர் அவர்களுக்கே திருப்பி வழங்கினார்.பள்ளிக்குழந்தைகளின் இச்செயல் ஆசிரியர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. சிறுவயதியிலேயே ஆசிரியர் தினத்தை ஞபாகம் வைத்து தங்கள் ஆகியருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

You must be logged in to post a comment.