திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் தியாகராஜன் வழிகாட்டுதலின்படி செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் எழிலன் செங்கம் ஒன்றிய செயலாளர் காசி ஆகியோர் முன்னிலை வைத்தனர் செங்கம் ஒன்றிய தலைவர் வெங்கடேசன் வரவேற்றார் நிர்வாகிகள் தேர்வில் செங்கம் வட்ட கிளை தலைவராக வெங்கடேசன் செயலாளர் காசி பொருளாளர் மகேஸ்வரன் துணைத் தலைவர் செந்தில்குமார் அமைப்பு செயலாளர் மணி ஒருங்கிணைப்பாளர் புரட்சி அரசன் செய்தி தொடர்பாளர் நாகராஜன் ஆகியோர் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர் பின்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் 01.06.2009-க்குப்பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைதல் வேண்டும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கு 25 மதிப்பெண் வழங்குவது போல் அனைத்து பாடத்திற்கும் 10 சதவீத அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் செங்கம் வட்ட பொருளாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்


You must be logged in to post a comment.