தாசீம் பீவி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ‘முகவை வாக்கத்தான் – 2017’ விழிப்புணர்வு பேரணி

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், தானம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘முகவை வாக்கத்தான் – 2017’ நேற்று 18.02.17 காலை 9.30 மணியளவில் ராஜா மேல் நிலை பள்ளியில் இருந்து துவங்கியது. இதில் கீழக்கரை தாசீம் பீவி கல்லூரி மாணவிகள் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

அங்கிருந்து நடைபயணமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் சீமை கருவேல மரங்களை வேரோடு அழித்தல், கண்மாய், குளம், ஊரணி, நீர்நிலைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குதல் சம்பந்தமான விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “தாசீம் பீவி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ‘முகவை வாக்கத்தான் – 2017’ விழிப்புணர்வு பேரணி

  1. என்னுடைய பார்வையில்… இப்போதைக்கு இது அவசியம் இல்லாத விழிப்புணர்வு பேரணி.முதலில் அரசுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். கடும் கோடையை எதிர் கொள்ள இருக்கிறோம். இராமநாதபுரத்தை சுற்றி எல்லா நீர்நிலைகளும் வறண்டு உள்ளது.இதை பயன்படுத்தி போர் கால அடிப்படையில் பெரிய கண்மாய்,ஆர் எஸ் மங்களம் கண்மாய், சக்கரை கோட்டை கண்மாய் போன்ற கண்மாய்களில் செழித்து வளர்ந்து இருக்கும் பெரிய கரு வேல மரங்களை தூரோடு பிடுங்க வேண்டும், அதன் பின் தூர் வாறி கிடைக்கும் மணலைக் கொண்டு வ்ரப்புகளை உயர்த்த வேண்டும்.அவசியப்பட்டால் தடுப்பு சுவர்களும் கட்ட வேண்டும்.இந்தப் பணிகளை மாணவச் செல்வங்களோ இளைஞர் பட்டாளமோ, பொது மக்களோ நிச்சயம் செய்ய முடியாது. இப்படிச் செய்தால் எதிர் வரும் கோடை / கால மழையின் நீரை நிச்சயமாக சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த முடியும். அதே நேரத்தில் ஊருக்குள் விழிப்புணர்வு மூலம் மழை நீர் சேமிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.ஆக்கப் பூர்வமான இதை செய்வீர்களா?குறிப்பு: அதிஷ்டவசமாக கீழக்கரையில் 99% வீடுகள் மழை நீர் சேமிப்புக்கு ஏற்ற வகையில் உள்ளது சில மாற்றங்களை செய்தால். மக்கள் அனைவரும் ஒன்றை கட்டாயமாக மனதில் கொள்ள வேண்டும்.கீழக்கரை மக்கள் முழுக்க முழுக்க கிணற்று நீரை நம்பி வாழ்பவர்கள் என்பது நிதர்சனமான உண்மை உண்மை உண்மை – Keelakarai Ojmst Ali Batcha

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!