கீழக்கரையில் உள்ள தாசிம் பீவி கல்லூரி இராமநாதபுரம் மாவட்டத்தில் முன் மாதிரியாக சீம கருவேல மரங்களை அழிக்க பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் ஆயிரக்கணக்கான சீம கருவேல மரங்களை அகற்றி சாதனைப் படைத்தனர். அதைத் தொடர்ந்து கீழக்கரையில் சீமைக் கருவேல மரங்களின் தீமைகளை வலியுறுத்தி பேரணியும் நடத்தினார்கள்.
இன்று (08-02-2017) கல்லூரி நிர்வாகம் சீம கருவேல மரங்களை பெரிய அளவில் அகற்ற அடுத்த கட்ட நடவடிக்கையாக இயந்திரங்களை வைத்து செயல்படுத்த முடிவெடுத்துள்ளார்கள். இந்த செயல்பாடுக்கு அதிகமான பொருளாதார செலவுகள் ஆகும். உதாரணமாக இயந்திரங்களுக்கான வாடகை, வேலையில் ஈடுபடுவர்களுக்கான போக்குவரத்து செலவு’ சிற்றுண்டி செலவு, பாதுகாப்பு சாதனங்கள் போன்ற வகைகளுக்கு தேவைப்படுகிறது. கல்லூரி நிர்வாகமும் அதிக அளவு பொருளாதார உதவிகள் செய்து வருகிறது ஆனால் பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் புரவலர்கள் உதவி செய்யும் பட்சத்தில் இன்னும் விரியமாகவும் விரைவாகவும் செய்ய முடியும் என்று கல்லூர் நிர்வாகம் கருதுகிறது. அதன் அடிப்படையில் வேண்டுகோள் முன் வைத்துள்ளார்கள். ஆர்வம் உள்ளவர்கள் கீழ்கண்ட கல்லூரி வங்கி கணக்கில் தங்களுடைய பொருளாதார உதவிகளை செலுத்தலாம்.


INDIAN BANK, KILAKKARAI
ACCOUNT NUMBER: 536471696
IFSC CODE: IDIB000K158
MICR CODE: 623019095

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









