இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு அடுத்தது என்ன கருத்தரங்கு நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். ஆளுமை பண்பு தன்னம்பிக்கை பேச்சாளர் பஜிலா ஆசாத், உதவி பேராசியர் முகமது ரபிக், உதவி பேராசிரியை நசீமா பர்வின், வளாக தேர்வு வேலைவாய்ப்பு அலுவலர் கிருத்திகா உள்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசுகையில், இளைஞர்கள் பலம் நம் நாட்டில் வலுவான கட்டமைப்பாக உள்ளது. இது அப்துல் கலாம் பிறந்த பூமி. நாம் தேர்ந்தெடுக்கும் தொழிலில் மட்டும் வெற்றியடைவது மட்டும் முக்கியமல்ல. வாழ்விலும் வெற்றியை எட்டுவது இலக்காக இருக்க வேண்டும். சமூக அக்கறை அவசியம். சமூத்தில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க கற்று கொள்ள வேண்டும். பொறாமையை தவிர்க்க வேண்டும். விரல் நுனியில் உள்ள வாய்ப்பில் உள்ளது. வெற்றிக்கான வாய்ப்பிற்கு எல்லை வரையறுத்து கொள்ளாதீர்கள். சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. நடத்தை மட்டும் ஒழுக்கமல்ல. சமூக மேம்பாடு தொடர்பான செயல்பாடுகளே சுய ஒழுக்கம் . தன் னம்பிக்கை, கடின உழைப்பு, இருந்தால் உங்கள் இலக்குகளை எட்ட முடியும். மன மகிழ்ச்சி. முக்கியம். பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவியர் மட்டுமல்ல. ஒவ்வொருவரும் பங்கேற்று கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
சினிமா இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது: பெண்களை காப்பது கல்வி மட்டுமே. பெண்கள் கட்டாயம் முதுகலை பட்டம் முடித்து விடுங்கள். 5 ஆண்டுக்குள் வேலைக்கு சென்று விடுங்கள். கல்வி மட்டும் பெண் விடுதலை அல்ல. பொருளாதார விடுதலை பெண்ணுக்கு மிக, மிக அவசியம். படித்த படிப்பிற்கேற்ற எந்த வேலையும் யாரும் செய்வதில்லை. வேலைக்காக படிக்காதீர்கள். சமூகத்துடன் பழகுவதில் தான் துவங்குவதில் கல்லூரி வாழ்க்கை துவங்குகிறது. எனக்கும், என் தந்தைக்கும் ஒரே தொழில் தான். நான் கதாபாத்திரம் விற்கிறேன். அவர் எவர்சில்வர் பாத்திரம் விற்கிறார். ஏதாவது செய். தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போ. எங்கே செல்லலாம் என யோசித்தோம் . சினிமாவுக்கு போறீயா என என்னை விரட்டினார். ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தது தான் என் தந்தை எனக்கு கொடுத்த கடைசி பணம் . உன்னை காப்பாற்ற பழகி கொள் என கூறி சென்னைக்கு விரட்டினார்: ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்லும் போது ஏற்கனவே தான் இருந்த இடம் அருமை புரியும். துவக்கத்தில் எது வெட்கம், அவமானத்தை நமக்கு தந்தோ அதுவே இறுதியில் வெற்றிக்கு வித்திடும்.
உலகம் உன்னை துன்புறுத்தும். விரட்டியடிக்கும். ஏமாற்றும், அவமானப்படுத்தும். இச்சவால்களை வென்று சாதிக்க வேண்டும். தினமும் 10 பக்கம் ஏதாவது படியுங்கள். சுவாரஸ்யம் நிறைந்த வளமான மொழியில் இருந்து நாம் வந்துள்ளோம். தமிழ் மொழியில் வளமாக இருந்தால் தான் ஆங்கிலம் சரளமாக வரும். அரசின் ரகசிய திட்டத்தால் திருக்குறளை மனப்பாடப் பகுதியாக வைத்து முழுமையாக யாரும் படிக்க இயலாமல் போனது. அறத்துடன் பொருள் சேர்த்தால் பொருள் நிலைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












