தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 07/05/1018 அன்று காலை11.00 மணியளவில் ஜன்சேவா கூட்டுறவு சங்கம் லிமிடெட் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா வரவேற்புரை மற்றும் தலைமையுரை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ஜன்சேவா கூட்டுறவு சங்க செயலாளர் ஜமான் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு வட்டியில்லா கடன் பெறுவது பற்றியும், தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், உத்திகள் பற்றியும், தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைவது எப்படி என்றும், ஜன்சேவா அமைப்பில் உறுப்பினராக சேருவது தொடர்பான தகவல்களைப் பற்றியும் இக்கருத்தரங்கத்தில் கூறினார்.
இக்கருத்தரங்கத்தில் கல்லூரி சேர்மன் ஆரிப் அப்துல் ரஹ்மான், சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் சேக் தாவூத்கான், கல்லூரிப் பேராசிரியர்கள், பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினர் மற்றும் ஜன்சேவா கூட்டுறவு சங்க உறுப்பினர்களான முகமம்து இப்ராஹிம், அசன்அலி ஆகியோர் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மற்றும் உள்தர மேம்பாட்டு குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











