கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், சுழற்சங்கம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் ஆகியவற்றின் சார்பில் 21.12.2018 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரியின் சமுதாயக் கூடத்தில் சிறப்பு இரத்ததான முகாம்-2018 நடைபெற்றது.
இம்முகாமில் கல்லூரியின் சுழற்சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி வே. அகிலா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா அவர்கள் தலைமையுரையாற்றினார்கள். திரு.S.ஹாருன், சேர்மன், திரு.M.ராக்லேண்ட்மதுரம், செயலாளர், மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
இராநமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையின் இரத்த வங்கி மருத்துவர் K.ஃபாத்திமா பதுல் ராணி, மாவட்ட இரத்தவங்கியின் அமைப்பாளர் திரு ஐயப்பன், இரதத்தானம் செய்வதின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினர்.
இம்முகாமில் 75-க்கும் மேற்பட்ட மாணவிகள் இரதத்ததானம் செய்தனர். முன்னதாக அரசு மருத்துவமனை சார்பில் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருமதி P.விசாலாட்சி நன்றியுரை வழங்க முகாம் இனிதே நிறைவடைந்தது.





You must be logged in to post a comment.