மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு..
சில மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும் இடையே அதிக அளவில் விற்பனை வித்தியாசங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.
வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்களுடன் அதற்குண்டான ரசீது கண்டிப்பாக வழங்க வேண்டும். மதுபானங்களை விற்பனை செய்யும்போது மட்டுமே பாட்டில்களை ஸ்கேன் செய்ய வேண்டும். மதுபானங்களை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
விற்பனைக்கும், இருப்புக்கும் வித்தியாசம் ஏற்படுகிறது. தவறான செயல்பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோரே இதற்கு முழு பொறுப்பாவார்கள். அவர்களிடம் துறைரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
You must be logged in to post a comment.