தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக!! தமிழ்நாடு முதலமைச்சருக்கு டாஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெபசிங் கோரிக்கை..

தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக!! தமிழ்நாடு முதலமைச்சருக்கு டாஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெபசிங் கோரிக்கை..

தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல தொழிற்சங்கம் (டாஸ்) மாநில பொதுச்செயலாளர் ஜெபசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழ்நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட தையல் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தையல் கடை மற்றும் வீட்டில் தையல் இயந்திரம் வைத்து தையல் தொழில் செய்து வருகின்றனர்.

தையல் தொழிலாளர்களின வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகவும். பரிதாபத்திற்கு உரியதாகவும் உள்ளது. பொதுமக்கள் விழாக்கள், பண்டிகைகள் காலங்களில் மட்டுமே தையல் கடைகளில் துணிகளை தைத்து வாங்கி உடுத்துகின்றனர். வருடத்திற்கு 3 மாதங்கள் மட்டுமே வேலை உள்ளது. 9 மாதங்கள் தையல் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாது பிற கூலி வேலைக்கு செல்லும் அவல நிலையில உள்ளனர்.

மேலும் ஏழை எளிய தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கின்ற வகையில் நூல், கேன்வாஷ், பட்டன் போன்ற மூலப்பொருட்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. 5 ரூபாய் என இருந்த மூலப்பொருட்களின் விலை தற்போது 15 ரூபாய் என்றளவில் உள்ளது. மின்சார கட்டணம் உயர்வு, பல விதமான வரிகள், கடை வாடகை, போன்ற காரணங்களால் தையல் தொழிலாளர்கள் தொழில் நடத்துவதற்கு வழியில்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

எனவே தையல் கடை மூலம் தொழில் செய்யும் தையல் தொழிலாளர்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்திற்கு மாநில அரசு இலவச மின்சாரம், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பள்ளிச் சீருடைகளை அவர்களே மொத்தமாக ஆர்டர் பெற்றுக் கொண்டு தைத்துக் கொடுப்பதை கைவிட்டு தையல் தொழிலாளர்கள் மூலம் உரிய கூலியை கொடுத்து தைத்து கொடுப்பதற்கும், வங்கிகள் மூலம் தையல் இயந்திரம் வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திடவும் மாண்புமிகு. முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல தொழிற்சங்கம் (டாஸ்) மாநில பொதுச்செயலாளர் ஜெபசிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!