கோவில்பட்டி அருகே டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டம்..

கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் குமாரபுரம் விலக்கு உள்ளது. இந்த விலக்கு அருகே உள்ள ஒரு கட்டடத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைக்க அதிகாரிகள் முயற்சி எடுத்து வந்துள்ளனர். நாளை கடையை திறக்க முடிவெடுத்து, அதற்குரிய மதுபானங்களை இன்று கொண்டு வந்து வைக்க எண்ணியுள்ளனர்.

இதையறிந்த குமாரபுரம் கிராம மக்கள் விலக்கு பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபுரம் விலக்கில் இருந்து ஒரு கி.மீ. தூரம் உள்ளது. இரவு நேரத்தில் வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள் பேருந்தில் இருந்து இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இப்பகுதியில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி உள்ளது. இப்பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை அமைந்தால், பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விடும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, டாஸ்மாக் மதுபான கடை இங்கு வரவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி ஜெபராஜ் கூறினார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!