சாயல்குடியில் கண்டெய்னரில் டாஸ்மாக் வியாபாரம் அமோகம்…

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பொதுமக்களின் நலனில் மிகவும் அக்கறை?? கொண்ட அரசு அதிகாரிகள் கணரடெய்னரில் டாஸ்மாக் கடையை திறந்து வைத்து வியாபாரத்தை அமோகமாக செய்து வருகிறார்கள்.

இதில் என் நன் கொடுமை என்றால்  தரைக்குடி ரோட்டில் ஏற்கெனவே ஒரு பிராந்தி கடை இருக்கு.  இப்போ கடந்த வாரம்  புதிதாக இன்னும் ஒரு பிராந்திக் கடைக்கு கட்டிடம் இல்லாத்தால் அவசரகதியில்  பழைய கண்டெய்னர்களுக்கு  பெயிண்ட் அடிச்சு கடைநை திறந்து இரவு நேரத்தில் ஜெனரேட்டர் போட்டு வியாபாரம் ஜோரா நடத்தப்படுகிறது. இந்த சாராய கடைக்கு அவசரகதியில் முடிவெடுத்த அரசு அதிகாரிகள் வறண்டு கிடக்கும் இந்த மாவட்டத்திற்கு தண்ணீர் கிடைக்க மாற்று யோசனை செய்தால் இந்த மாவட்டம் முன்னேறும்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “இந்த  சாலையில் தான் டான் பொஸ்கோ பள்ளி , தீயணைப்பு நிலையம் , வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது.  சில நேரங்களில் அவசரத்திற்கு புறப்பட்டு செல்லும் தீயணைப்பு வாகனத்தையும் , மாலை நேரங்களில் பள்ளி வாகனத்தையும்  சட்டவிரோதமாக நடைபெறும் பார்களில் குடித்துவிட்டு நிதானமிழந்த  குடிமகன்கள் இதுபோன்ற வாகனங்களுக்கு வழி விடாமல் இடையூறு ஏற்ப்படுத்துவதாக வருத்தத்துடன் கூறுகின்றார். ஆகவே புதிய மாவட்ட ஆட்சியர் இவ்விரு டாஸ்மாக் கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற முன்வர வேண்டும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!