இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF )தஞ்சாவூர் மாநகர குழு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு ..
தஞ்சாவூர் மாநகராட்சி கீழவாசலில் இயங்கி வரும் டாஸ்மாக் (கடை எண் 7901 ) கடையினால் பெண்களும் ,பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வணிக பெருமக்களும் போக்குவரத்து நெரிசலினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 11-09-2024 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் 11-09-2024 மதியம் 1 -00 மணியளவில் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேசி
30-11-2024 க்குள் இடமாற்றம் செய்து விடுவதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அவர்கள் கையெழுத்திட்டு உத்திரவாதம் அளித்து எழுதி கொடுத்து உள்ளார்கள்.
ஆனால் (06-01-2025) வரை கடை மாற்றம் செய்வதற்கான எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை .மாவட்ட ஆட்சியர் தலையிட்டுடாஸ்மாக் மது கடையை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர். பி. முத்துக்குமரன் . மாநகரக்குழு உறுப்பினர் ஆ.தன்ராஜ் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட பொருளாளர் உ.காதர்உசேன் , மாநகர செயலாளர் ஜெ.உமர் என்கிற காதர் உசேன் ஆகியோர் மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
செய்தி. . ஏ.கே.சுந்தர், தஞ்சாவூர்.
You must be logged in to post a comment.