இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் மையப்பகுதி மீன்பஜார் பகுதியில் மதுக் கடை இயங்கி வருகிறது. பகல், இரவு இயங்கும் மதுக்கடையை அகற்றக் கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் மனு கொடுத்தனர். அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஆவேசமடைந்த, பெண்கள், அனைத்து அரசியல் கட்சியினர், பொது அமைப்புகள், வியாபாரிகள் பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் பசுமலை, தலைமை ஆசிரியர் (ஓய்வு) சந்தியாகு தலைமையில், வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மதுரை வீரன், சமூக ஆர்வலர் சவுந்தர பாண்டியன், ஆயிர வைசிய சபை பொருளாளர் சுப்ரமணியன், வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் ராசி போஸ், விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்டச் செயலாளர் சிவா, மனிதநேய மக்கள் கட்சி இப்ராகிம், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத் தலைவர் அரவிந்தன், வழக்கறிஞர் முத்து கண்ணன், ஆசிரியர் தர்மலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து மதுக்கடைக்கு பூட்டு போட முயன்றனர் . பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.


You must be logged in to post a comment.