தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், முத்தாண்டிபட்டி தூய பீட்டர் பவுல் உயர்நிலைப் பள்ளியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு பரீட்சை அட்டை ,பேனா, பென்சில் ,லப்பர், ஸ்கேல் வழங்கப்பட்டது .நிகழ்ச்சிக்கு தூய பீட்டர் பவுல் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சகோதரி ஜெப தலைமை தாங்கினார்கள். ஆசிரியர் ,ஆசிரியைகள் கலந்து கொண்டனர் ,இந்நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிட்சை அட்டை பேனா, பென்சில் லப்பர், ஸ்கேல் ,தேர்வுக்கு தேவையான பொருட்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இன் தஞ்சாவூர் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்டின் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

You must be logged in to post a comment.