திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையும் விழா
திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஹோட்டலில் நடந்தது நிகழ்ச்சியில்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், முன்னால் எம்எல்ஏ வுமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.திராவிட மாடல் அரசு செய்து வரக்கூடிய மக்கள் நல பணிகளுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு அங்கீகாரமாக வெற்றி இருக்கும் என கருதுகின்றோம்.
நாடு தழுவிய அளவில் இந்தியா கூட்டணிக்கு மீது வெளியிலும் உட்புறத்திலும் விமர்சங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்போடு, சிறந்த ஒருங்கிணைப்போடு இருக்கிறது என்பதை ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி வாயிலாகவும் நிரூபிக்க வேண்டி உள்ளது. நாட்டினுடைய நலனிலும் இந்த வெற்றி அடங்கியுள்ளது என்ற காரணத்தினால் உறுதியாக எங்களது களப்பணி அங்கே இருக்கும்.
பல்கலைக்கழகம் மானிய குழுவின் தேவையில்லாத திருத்தங்களை மேற்கொள்வது மூலம் கல்வியின் தரத்தை சீர்குலைக்க கூடிய முயற்சியாக இருக்கிறது என்பதை கருதுகிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் சரியாக நடக்காது எனக் கூறி தேர்தல் ஆணையத்தை அவமதித்துள்ளார்.
ஜனநாயகத்தில் சமநிலை இருக்கும் என்றால் எதிர்க்கட்சிகள் களத்தில் நின்று போராட வேண்டும் அதை விட்டுவிட்டு பின்வாங்கி இருப்பது மூலமாக மோசமான தோல்வி என்று ஒப்புக் கொண்டுள்ளனர் அதிமுகவினர் நேர்மையான தேர்தல் நடக்காது என்று எதிர்க்கட்சிகளும் உதிரிக்கட்சிகளும் பரஸ்பர குற்றம் சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் முஹம்மது ஷரீப் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆத்தூர் ரகுமான் மாவட்ட செயலாளர் பக்கீர் மைதீன் அவைத்தலைவர் ஷேக் தாவூத் துணைச் செயலாளர்கள் தர்வேஸ் சேக் அப்துல்லா சுரேஷ் காந்தி ஹபீப் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.