துபாயில் மனித நேய கலாச்சார சார்பில் இப்தார் நிகழ்ச்சி நேற்று (01-06-2018) அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மஜக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் எல்லோருடைய கவனத்தை ஈர்க்கும் விதமாக தற்பொழுது இந்தியா மற்றும் தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களாள தூத்துக்குடி தியாகி ‘ஸ்னோலின்’ பெயரில் நுழைவாயில் மற்றும் காஷ்மீர் குழந்தை ‘ஆஃசிபா’ பெயரில் அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது.
இஃப்தார் நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக, தூத்துக்குடி ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் 1 நிமிடம் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழக அரசியல் குறித்து சிறப்புரையாற்றினார்கள். பிறகு துண்டு சீட்டுகள் மூலம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் நிகழ்வைப் பற்றி அறிந்து ஏராளமான இளைஞர்கள் வரத்தொடங்கியதால் 6.00 மணி முதலே கூட்டம் நிரம்ப தொடங்கியது, இருப்பினும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வண்ணம் துரிதமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஷேக்தாவூத் மரைக்காயர், சுல்தான் ஆரிபீன், சாகுல் ஹமீது, குத்தாலம் அஷ்ரப் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற பாடலை தோப்புத்துறை ஹாஜா பாடி, பரவசப்படுத்தினார். தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் மஜகவின் அரசியல் அனுகு முறைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
இந் நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வருகை தந்து மஜக பொதுச்செயலாளரை சந்தித்து அவரது சட்டமன்ற பணிகளுக்கு வாழ்த்து கூறினர். இந்நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் அனைவருடைய விருப்பத்திற்கு ஏற்ற ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் , அமிரக செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் அஷ்ரப் அலி, துணை செயலாளர்கள் அப்துல் ரெஜாக், அபுல் ஹசன், அசாலி அகமது, அமிரக ஊடக செயலாளர் ஜியாவுல் ஹக், மண்டல செயலாளர்கள் துபாய் ரகமத்துல்லா, ஷார்ஜா யூசுப்தீன், அபுதாபி தைய்யூப், அல் அய்ன் இம்ரான், மண்டல பொருளாளர்கள் துபாய் ஷபீக், ஷார்ஜா பிலால், அபுதாபி காஜாமைதீன், அப்பாஸ் முகம்மது மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













