தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும்; வெதர்மேன் ராஜா தகவல்..

தமிழ்நாட்டில் கடுமையான குளிரும், பனிப் பொழிவும் அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்த வானிலை அறிக்கையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வந்த தொடர் சாரல் மழை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

 

இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்யும். வறண்ட வாடைக் காற்றின் ஊடுறுவல் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் கடுமையான குளிரும் பனிப்பொழிவும் அதிகரிக்கும். வேலூர், திருப்பத்தூர், இராணிப் பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் குளிர் அதிகரிக்கும்.

 

வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் குறைந்த பட்ச வெப்பநிலை 17°© ஒட்டியே பதிவாகும். மேலும் திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களிலும் அதிகாலை நேர வெப்ப நிலை 18°© பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் ஊட்டி, கொடைக் கானல் பகுதிகளில் உறைபனி நீடிக்கும்.  பூம்பாறை கூக்கல் பகுதியில் 5°© வரை குளிர் நிலவும். நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் -2°© (மைனஸ் இரண்டு டிகிரி செல்சியஸ் கீழ்) வெப்பநிலை செல்லும் என்பதால் அங்கும் உறைபனி நீடிக்கும்.

 

தென் மாவட்டங்களை பொறுத்தவரை நெல்லை, தென்காசி, தேனி, மலைப் பகுதிகளில் கடுமையாக குளிர் அதிகரிக்கும். மாஞ்சோலை மலைப் பகுதியின் வெப்பநிலை 10°© ஒட்டியே பதிவாகும். மேலும் கோவில்பட்டி, விருது நகர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் குளிர் அதிகரிக்கும். இவ்வாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!