தேர்வெழுதும் மாணவர்கள்- ஆசிரியர்களின் பாதுகாப்புக்கருதி பரிசோதனை செய்ய வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்..
உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எளிதில் தொற்றும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி இத்தாலி ஈரான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட. நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து இந்தியாவையும் விட்டுவைக்க வில்லை. கர்நாடகா,டெல்லி, பஞ்சாப், மும்பையில் தலா ஒருவர் வீதம் நான்குபேரை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட. பள்ளிகள்,கல்லூரிகள்,விளையாட்டு அரங்குகள்,மால்கள் உள்ளிட்ட மக்கள்கூடும் இடங்களை மார்ச் 31 வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது. தற்போது கொரோனா தமிழ்நாட்டினை தாக்காமல் தடுத்திட வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு சிறப்பாக எடுத்துவருகிறது என்பது மிகையாகாது. மேலும் அச்சத்தைத் தவிர்க்கும் வகையிலும் தன்னம்பிக்கையோடு வருவதற்கு தேர்வெழுதும் 11,12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்,தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய்,காய்ச்சல் இருக்கா என்பதை பரிசோதித்து அனுப்பிடவேண்டும். வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் பாதுகாப்பது அவசியம். 200 பேருக்கு பரவினால் 2000 பேருக்கு பரவிவிடும். பள்ளிகளில் மாணவர்களின் நலன்கருதி தினந்தோறும் கிருமிநாசினி தெளித்து முன்னெச்சரிக்கை மேற்கொண்டாலும் தனிமைப்படுத்துதலே சிறந்த தற்காப்பு நடவடிக்கையாகும்.ஆகையால், தற்போது தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுமையங்களுக்கு வரும் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பணியாளர்களுக்கும், பள்ளிக்குவரும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய ஆவனசெய்திடும்படி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இல்லா நிலையினை உறுதிச்செய்யும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸை தமிழகத்திலிருந்து தனிமைப்படுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









