கொரோனா தொற்றிவிடுமோ என்கிற பயம் இன்னும் தொற்றி நிற்கும் நிலையில் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு, படிப்பை பாராமாக்கிவிட வேண்டாம்:- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிக்கை!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 10.ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடந்தே தீரும் .கல்வி அமைச்சரின் அறிவிப்பு மாணவர்-பெற்றோர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவும் விஸ்வரூபமெடுத்து தமிழ்நாட்டில் 11 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜுன் 1 ந்தேதி நடத்தப்படும் என்பது இதுவரை பாதுகாப்பாக இருந்த குழந்தைகளை கொரோனா தொற்றிவிடுமோ பயமே தொற்றி நிற்கிறது.
9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வெழுதுபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியே. ஆர்வத்துடன் படிக்கும் மாணவர்களுக்கு கூட பேரிடர் காலத்திலும் தேர்வை திணிப்பதால் படிப்பு கூட பாராம்தான்.
எனவே, நடைமுறை சிக்கலையும் ஆராய்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 மாதங்களாக ஊரடங்கிலிருந்து நேரிடையாக தேர்வு எழுதச்சொல்வதால் மனஉளைச்சலில் உள்ளார்கள் ஏற்கனவே வீட்டிற்குள் முடங்கி வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு மேலும் மனஅழுத்தத்தை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் விடுப்பு அளித்ததால் பல மாணவர்கள் சொந்த ஊருக்கு வெளிமாவட்டங்களுக்கு சென்றுள்ளார்கள்.மே-31 வரை ரயில்கள் ,பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் அவரவர் வீட்டிற்கு உடனடியாக திரும்ப e-pass வாங்க மாணவர்களுக்கு அறிவுறுத்துவதும் பசியில்வாடும் பல்லாயிரக்கணக்கானோர் பணமில்லாமல் பாதிக்கப்படுவார்கள்.மேலும் வெளிமாவட்டங்களிலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்ற அறிவிப்பும் வெளியிட்டுவிட்டு பொதுத்தேர்வும் எழுதமுடியுமா? பல பள்ளிகள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியிருக்கும் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்களாகவும் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும் என்பதால் அப்போதே அனைவருக்கும் தேர்வு எழுதும் வகையில் தேர்வை தள்ளிவைக்கலாமே. மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் என தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் என்றாலும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சமாக ஒருபள்ளிக்கு 20 மாணவர்கள் முதல் அதிகபட்சமாக 1000 மாணவர்கள் வரை தேர்வெழுத உள்ளார்கள். என்னதான் தேர்வறையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும் பள்ளிக்குள் நுழையும்போதும் தேர்வுமுடிந்து திரும்பும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வாய்பில்லை. வினாத்தாள்,விடைத்தாள்கள் பிரித்து வழங்குவது முடிந்தபிறகு விடைத்தாளில் முத்திரையிட்டு அனுப்புவதிலும் பாதுகாப்பு இன்மையே தொடரும். ஒரே நாளில் 9 லட்சத்து 45 மாணவர்களையும் 40,000 மேற்பட்ட ஆசிரியர்கள்,பணியாளரை களை கொரோனா பரிசோதனை தினந்தோறும் செய்யப்படுமா ? ஒருவருக்கு தொற்று இருந்தாலும் பல ஆயிரக்கணக்காணோரைப் பாதிக்கும். தமிழ்நாட்டில் கொரோனாவின் கோரதாண்டவத்தினால் பாதிப்பு 11,000 த்தை தாண்டியுள்ளதால் ஒருவித பயத்துடனே வாழ்ந்துவருகிறார்கள். ஒருபுறம் ஊரடங்கு நீட்டிப்பு மறுபுறம் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வு அறிவிப்பு மேலும்மேலும் வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சுகிறது. எனவே 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை ரத்து செய்ய இயலாதபட்சத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுப்பாட்டிற்குள் வந்தப் பிறகே தேர்வு நடத்தவேண்டும்.அதுவும் மாணவர்களுக்கு நினைவூட்டல், ஆயத்தப்பயிற்சி மற்றும் புத்தாக்கப்பயிற்சியும் குறைந்தபட்சம் இரண்டுவாரம் ஆசிரியர்களோடு மாணவர்கள் இருந்தால் மட்டுமே ஊரடங்கால் உறைந்துபோன உள்ளங்களை உயிர்ப்பிக்கமுடியும்.இல்லையேல் 10 ஆம் வகுப்போடு கல்வியினை தொடரமுடியாமல் இடைநிற்றலே அதிகரிக்கும்.தேர்வுக்கு பாதுகாப்பான வசதிகள் ஏற்படுத்த முடியுமென்றால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டுவாரம் பள்ளி வைத்துவிட்டு தேர்வு நடத்திட ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









