ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியிருந்தாலும் மத்திய அரசு ஊழியர்களை போன்று 60 வயதாக நீட்டிப்பு செய்ய வேண்டும்:- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கை..
தமிழக அரசு தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து ஓராண்டு நீட்டிப்பு செய்து ஓய்வுபெறும் வயதை 59தாக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது, உண்மையாகவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது அக்கறை கொண்ட அரசாக இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 உள்ளது போன்று தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 வதாக உயர்த்தவவேண்டும் கொரோனா பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இத்தருணத்தில் அரசு ஊழியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டுகிறேன்.
எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த போராடிய 5000கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளையும் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்ப பெறவேண்டும்.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை ரத்து ஜி்.பி.ஃஎப் வட்டி குறைப்பு ஆகிவற்றையும் திரும்ப பெறவேண்டுமாய் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு.


You must be logged in to post a comment.