நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கை !தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் !!

தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவிக்கையில் :- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கை கண்டிகைத்தது என்றும் அரசியல் காரணங்களுக்காகவும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதற்காகவும், மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் ஜனநாயக அமைப்புகளையும், சிறுபான்மை சமூகம் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு எதிராகவும் தேசிய புலனாய்வு முகமையை பாசிச பாஜக அரசு ஏவிவிட்டு வருகின்றது. சிபிஐ என்னும் மத்திய புலனாய்வு அமைப்பை அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வரும் நிலையில், மதச்சார்பின்மைக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசு தற்போது என்.ஐ.ஏ.-வை ஏவிவிட்டு வருகின்றது. தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தீவிரவாத வழக்குகளை விசாரித்து அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அரசியல் பழிவாங்கும் கருவியாக ஆட்சியாளர் களால் மாற்றப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் ஜனநாயக அமைப்புகளை மக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும் என்று செய்தியின் வாயிலாக தெரிவித்துள்ளார். 

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!