மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைக்கு பின் நிலுவையில் உள்ள செலவுத் தொகையை உடனே வழங்க வேண்டும் ஓய்வூதியர் செலவுத்தொகை கோரி அனுப்பப்படும் விண்ணப்பத்தின் நிலையை அறிய வலைதளத்தை உருவாக்க வேண்டும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முழுமையான காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளை கலைய வலியுறுத்தி அனைத்து துறை அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தங்களுடைய கோரிக்கைகளை அரசு செவி சாய்த்து உடனடியாக அதனை நிவர்த்தி செய்ய வேண்டுமென அவர்கள் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

You must be logged in to post a comment.