ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகிய பத்திரிகை மற்றும் ஊடக துறை என்பது சமூக பொறுப்புணர்வுடன் உண்மை செய்திகளை உடனுக்குடன் சாமானியனுக்கு கொண்டு செல்லும் மாபெரும் பணியினை செம்மையாக செய்து வரும் உன்னதமான துறையாகும். இதனை மென்மேலும் சிறப்புடன் செய்வதற்கு பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் போன்றோரின் அர்ப்பணிப்பு எழுத்துக்களால் சொல்லி விட முடியாது.
இந்த பத்திரிகை துறை நண்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (தமிழ்நாடு பத்திரிகை ஊடகவியலாளர் யூனியன்) என்கிற பேரவை சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகமெங்கும் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பாக செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் கீழக்கரை ‘கீழை நியூஸ்’ அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்திருந்த தமிழ்நாடு பத்திரிகை ஊடகவியலாளர் யூனியனின் நிறுவனர், மாநில தலைவர், ‘சட்டம் ஒழுங்கு’ மற்றும் ‘புதுவை தேசம்’ உள்ளிட்ட மாத இதழ்களின் ஆசிரியர் டாக்டர் மு. சிவதமிழவன் அவர்களை கீழை நியூஸ் நிறுவனர் ஆசிரியர் அப்துல்லா செய்யது ஆப்தீன், கீழை நியூஸ் இணை ஆசிரியர் வழக்குரைஞர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் மற்றும் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாவட்ட நிர்வாகி, கீழை நியூஸ் நிருபர், புகைப்பட கலைஞர் ‘ரெட் மீடியா’ கார்த்தி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்த சந்திப்பின் போது தற்கால ஊடக நிகழ்வுகள் மற்றும் எதிர்காலத்தில் பத்திரிக்கை துறையில் ஒருங்கிணைந்து ஆற்ற வேண்டிய பணிகள், எதிர்கொள்ள வேண்டிய இடர்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
மேலும் எதிர் வரும் மார்ச் 31 அன்று சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் பொதுக்குழு கூட்டத்தில் யூனியனில் அங்கம் வகிக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் கீழை நியூஸ் மீடியாவுக்கு ஆதரவு அளிக்கும் அறிவிப்பினை மாவட்ட நிர்வாகி ரெட் மீடியா கார்த்தி செய்வது என்றும் கீழை நியூஸ் சம்பந்தமான அறிமுக கையேட்டினை பொதுக் குழுவில் பங்கேற்கும் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









