சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல் துறையின் வழிகாட்டுதல்கள்..

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சபரிமலை பக்தர்கள் அதிக கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இதனால் சபரிமலையில் அதிக நெரிசலைத் தவிர்க்கலாம் என்றும் கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் வரிசையில் முன்பதிவு செய்தவர்கள் தரிசன தினத்தன்று சபரிமலைக்கு வருகை தந்தால், தேவையற்ற நெரிசலைத் தவிர்க்கவும், சிரமமின்றி சுமூகமாக தரிசனம் செய்யவும் உதவும் என்று கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. நிகழ்விட முன்பதிவானது 10,000 பக்தர்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தரிசனத்திற்கு முன்கூட்டியே வரிசை பதிவு செய்ய விரும்புவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் 30.11.2024 அன்று இரவு 10 மணி வரை தரிசனத்திற்காக கோயிலுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 66821 ஆகும். அதில் 13,516 பேர் முன்பதிவு செய்யப்பட்ட நாளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ வந்துள்ளனர். டிச.01 வரை மொத்தம் 11,12,447 பேர் தரிசனத்திற்கு வந்துள்ளனர். இவ்வாறாக நவம்பர் 15ஆம் தேதி முதல் 1,95,327 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ வந்துள்ளனர். ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தைப் பின்பற்றாமல் நவம்பர் 15 ஆம் தேதி முதல் தரிசனத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.

எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தால், ஐயப்ப தரிசனம், சிரமம், நெரிசல் இன்றி, சுமுகமாக நடைபெறும் என கேரள மாநில காவல்துறை வலியுறுத்தியுள்ளனர். இதனால் கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பக்தர்கள் குறிப்பிட்ட அளவிற்கு முன்பதிவு நேரத்தைப் பின்பற்ற முடியும் என்று கேரள மாநில காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சபரிமலை பக்தர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

1. சபரிமலை ஏறும் போது 10 நிமிட நடைக்கு பிறகு 5 நிமிடம் ஓய்வெடுக்கலாம்.

2. மரக்கூட்டம், சாரம் குத்தி, நடைபந்தல் வழியாக சன்னிதானத்தை அடைய வழக்கமான நடைபாதையை பயன்படுத்தவும்.

3. 18-ஆம் படியை அடைய வரிசை முறையைப் பின்பற்றவும்.

4. தரிசனம் முடித்து திரும்பும் போது நடபந்தல் மேம்பாலத்தைப் பயன்படுத்தவும்.

5. சன்னிதானம் செல்லும் வழியில் வனத்துறைக்கு சோந்தமான நிலத்தில் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

6. பம்பையிலிருந்து சன்னிதானத்திற்குச் செல்லும் போது கூட்டத்தின் அளவைக் கண்டு அதற்கேற்ப செல்லலாம்.

7. டோலியைப் பயன்படுத்துபவர்கள், தேவஸ்தான அலுவலகத்தில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை வைத்துக் கொள்ளவும்.

8. பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பாதுகாப்புச் சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

9. இலவச உதவி எண் 14432-ஐ பயன்படுத்தி எந்தவித உதவிக்கும் காவல்துறையை அணுகலாம்.

10. சந்தேகத்திற்கு இடமளிக்கும் நபர்கள் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.

11. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே உணவு பொருட்களை வாங்கவும்.

13. பம்பை, சன்னிதானம் மற்றும் மலையேற்றப் பாதைகளை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்.

14. ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.

15. குப்பை தொட்டிகளில் மட்டுமே குப்பைகளை போடவும்.

16. பயண பாதையில் தேவைப்பட்டால், மருத்துவ மையங்கள் மற்றும் ஆக்ஸிஜன் பார்லர்களின் வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!