தமிழக சட்ட சபை இன்று கூடியது! பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட வாய்ப்பு..

தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் கூடியதும் உரையாற்றிய சபாநாயகர் அப்பாவு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பை வாசித்தார். கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்க இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் நாட்கள் குறைவாகவே இருப்பதால், சட்டசபை கூட்டம் காலை, மாலை என இருவேளை நடைபெற இருக்கிறது.29-ந்தேதி (சனிக்கிழமை) காலை காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். கள்ளக்குறிச்சி கொள்ளச் சாராயம் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சியினர் விவாதங்கள் எழப்ப கூடும் என தகவல்..

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!