துணிச்சல் மிக்க செவிலியர் சபீனா; கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி தமிழக அரசு பாராட்டு..

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயர்மட்ட கயிறு வழியாக (Zip line )  ஆற்றைக் கடந்து சென்று தன்னலம் பாராமல் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காப்பாற்றிய கூடலூரைச் சேர்ந்த துணிச்சல் மிக்க செவிலியர் சபீனா மற்றும் மருத்துவ குழுவினரை பாராட்டி தமிழ்நாடு அரசு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கி கெளரவித்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா, வயநாடு சூரல்மலை பகுதியில் கரைபுரண்டோடும் ஆற்றை கடந்து ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு சென்று அங்கு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 35 பேருக்கு மருத்துவ உதவி செய்து காப்பாற்றி உள்ளார். அவர் ஜிப்லைனில் ஆற்றை கடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவின. பலரும் செவிலியர் சபீனாவின் சேவையை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் செவலியர் சபீனாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா ஊட்டியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, செவிலியர் சபீனா மற்றும் வயநாட்டில் மருத்துவம் மற்றும் பல்வேறு உதவிகள் செய்த மருத்துவர் சரவணன் மற்றும் அவருடைய குழுவினர் 8 பேரையும் தமிழக அரசு சார்பில் பாராட்டி நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!