வக்ஃபு சொத்து ஆவணங்களை UMEED PORTAL – ல் பதிவு செய்வதை விரைவு படுத்திட வேண்டும்.கே நவாஸ்கனி MP தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம்..
வக்ஃபு சொத்துக்களையும், முத்தவல்லிகளையும் UMEED PORTAL ல் வரும் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்திட வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இன்னும் மூன்று நாட்களே இருப்பதினால் UMEED PORTAL – ல் பதிவு செய்வதை விரைவு படுத்திட வேண்டும் என கண்ணியமிக்க முத்தவல்லிகளை கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய வக்ஃபு சொத்துக்களை பாதுகாத்திடும் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் கண்ணியமிக்க முத்தவல்லிகள் இந்த சிறிய கால இடைவெளியில் மிகத் துரிதமாக செயல்பட்டு விரைவாக இந்த பணிகளை முடித்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் கால அவகாசம் கொடுக்கப்படவில்லை, எனவே பணிகளை மேலும் துரிதப்படுத்தி தாமதமின்றி உடனடியாக பதிவு செய்வதை உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


You must be logged in to post a comment.