தென்காசி மாவட்டத்தில் நடந்த கோர விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதிஉதவி..

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதிஉதவி அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 28-01-2024 அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி கிராமம், பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த போத்திராஜ் (வயது 32) த/பெ. மூக்கையா கோனார், வேல்மனோஜ் (வயது 30) த/பெ. கோபால், சுப்பிரமணியன் (வயது 29) த/பெ. பரமசிவன், கார்த்திக் (வயது 24) த/பெ. பட்டமுத்து, முத்தமிழ்செல்வன் (வயது 23) த/பெ. ராமமூர்த்தி, மனோ (வயது 19) தபெ. மாரிச்சாமி ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!