தென்காசி மாவட்ட தம்பதியரின் வீரதீர செயலை பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அத்தம்பதிகளுக்கு பொன்னாடை அணிவித்து ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை வெகுமதியாக தலைமை செயலகத்தில் வைத்து வழங்கினார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம், புளியரை கிராமப் பகுதியில் 25-2-2024 அன்று நள்ளிரவு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு செங்கோட்டை-கொல்லம் இரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்ததை தொடர்ந்து, செங்கோட்டை பகுதியிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த இரயிலை அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியினர் தண்டவாளத்தில் ஓடிச்சென்று டார்ச் லைட் ஒளியின் மூலம் இரயில் ஓட்டுநருக்கு சைகை காண்பித்து, இரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், அத்தம்பதியரின் வீரதீர செயலை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையை வெகுமதியாக வழங்கி பாராட்டினார். பெரும் விபத்தை தடுத்து நிறுத்திய வீர தம்பதியரை தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









