மாற்றுத்திறனாளிகள் மனதில் மகிழ்ச்சியை விதைத்த மகத்தான திட்டங்கள்; மனிதநேயமிக்க முதல்வருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த தென்காசி மாவட்ட பயனாளிகள்..

தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் மனதில் மகிழ்ச்சியை விதைத்துள்ளன. மனிதநேயமிக்க தமிழ்நாடு முதல்வருக்கு தென்காசி மாவட்ட பயனாளிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தில் உயர எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் உறுதுணையாக நிற்கும் மக்கள் அரசாக திகழ்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 1993ஆம் ஆண்டில் ஊனமுற்றோர் தனி இயக்ககம் சமூக நல இயக்ககத்திலிருந்து பிரித்து ஏற்படுத்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையை இவ்வரசு வெளியிட்டது. மாற்றுத் திறனாளிகளுக்குள்ள தனிப்பட்ட திறமைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களை உடல் ஊனமுற்றோர் என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவதற்கென இனி அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என தனியாக ஒரு நிர்வாகத் துறை துவக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தில் ஒரு அங்கமாக அனைவரும் ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழுபங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய விழிப்புணர்வை இவ்வரசு ஏற்படுத்தி வருகிறது. சமுதாயத்தில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் சமமாக ஈடுபடுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு முழுவதுமாக உதவும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அமல்படுத்தி வருகிறது. ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள் வாழவேண்டும் என்பதை உறுதி செய்யவென அரசால் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டு 25 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.83,000 வீதமும், 2022-2023 ஆம் ஆண்டிற்கு தலா ரூ.84,000 வீதமும், 2023-2024 ஆம் ஆண்டிற்கு தலா ரூ.93,000 வீதமும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பயனடைந்த பயனாளிகள் தெரிவித்ததாவது, சாகுல் ஹமீது, தென்காசி மாவட்டம், வடகரை கீழ்பிடாகை: என் பெயர் சாகுல் ஹமீது. எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டத்திலுள்ள வடகரை கீழ்பிடாகை. கடந்த வருடம் விபத்தில் அடிபட்டு கால்கள் நடக்க முடியாமல் போய்விட்டது. நான் மொபைல் சர்வீஸ் கடை வைத்துள்ளேன். அதில் வரும் வருமானத்தில் தான் என் குடும்பத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் இருப்பதை அறிந்து மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தேன். என்னுடைய விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்டு எனக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கினார்கள். என்னால் இப்போது மொபைல் சர்வீஸ் கடைக்கு ஸ்கூட்டரில் செல்வது மிகவும் பேருதவியாக உள்ளது. எனக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் கொடுத்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்னுடைய நன்றியை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலாறு, தென்காசி மாவட்டம், இராயகிரி: என் பெயர் பாலாறு. என்னுடைய சொந்த ஊர் தென்காசி மாவட்டம் இராயகிரி. என்னுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். கடந்த வருடம் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போய் விட்டது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் நடக்க முடியாமல் உள்ளவர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் இருப்பதை தெரிந்து கொண்டு மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தேன். எனக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கினார்கள். இப்போது என்னால் வெளியிடங்களுக்கு ஸ்கூட்டரில் செல்ல முடிகிறது. என் போன்ற நடக்க முடியாதவர்கள் மற்றும் ஏழை எளிய மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!