சோழவந்தான் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாள் விழா; திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

சோழவந்தான் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா; திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சோழவந்தான் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த தின விழா திமுக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் அன்னதானம் வழங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச் செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் தனபாலன், ரேகா வீரபாண்டி, கார்த்திகா ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதே போல் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 71ஆவது பிறந்த தின விழா முன்னிட்டு திமுக சார்பாக அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் நகரச் செயலாளர் வக்கீல் சத்ய பிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின், துணைத் தலைவர் லதா கண்ணன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் குருசாமி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் அன்னதானம் வழங்கினார். இதில் அவைத் தலைவர் தீர்த்தம், மீனவரணி முனியாண்டி, பணி நியமன குழு ஈஸ்வரி, ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் முத்துச் செல்வி, சதீஷ்குமார், சிவா, நிஷா, கௌதமராஜா, செல்வராணி, ஜெயராமச்சந்திரன் கொத்தாலம் செந்தில், வேல் குருசாமி, முட்டை கடை காளி, சுரேஷ், மாணவர் அணி எஸ் ஆர் சரவணன், சங்கங்கோட்டை சந்திரன், ரவி மில்லர், நூலகர் ஆர் எம் எஸ் காலனி ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பார்த்திபன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் உள்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் சோழவந்தான் பேரூராட்சி ஒன்றாவது வார்டு பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் பேரூராட்சி பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் முத்து செல்வி, சதீஷ் நிஷா, கௌதம ராஜா, மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!