நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு..

நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு:

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயம்.

திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருவது தெரியும்.

தமிழக அரசின் எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது-முதலமைச்சர் ஸ்டாலின்.

ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை நான் அடிக்கடி, சொல்லிக்கொண்டு வருகிறேன்.

ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்க – மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.

மோடி தலைமையிலான அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா மத்திய அரசுகளும் கூட அப்படித்தான் இருந்தன.

மோடி தலைமையிலான அரசு மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள்.

ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை – ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார்,.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தமிழ்நாட்டுக்கென எந்த சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசுக்கு மக்கள் பெரும்பான்மை அளிக்கவில்லை-முதலமைச்சர் ஸ்டாலின்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!