இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலை நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பாக மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை கண்டித்தும் , கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் 3 நபர் மீது கத்தியால் குத்தி கொலை வெறித்தாக்குதல் நடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் , கீழக்கரையில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் கலந்து கொண்டு பேசுகையில் :- தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே மத்தியிலே பாசிசத்திற்கு எதிராக பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்று அயராது உழைத்து இரவு பகல் பாராமல் ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள் அதை முன்வைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றார்கள் என்று பலமுறை எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் மேடை மேடையாக விமர்சனம் செய்து வருகிறார். இதே நேரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்வந்து போதைக்கு எதிராகவும் உங்கள் ஆட்சிக்கு எதிராகவும் பிரச்சாரத்தை முன்னெடுத்தால் நாங்கள் களம் கண்டால் நீங்கள் கண்ட கனவு அடியோடு ஒளிந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாமல் ஆகிவிடும் என்பதை நீங்கள் உணர வேண்டும் . இனியாவது போதைப் பொருள்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் போதைப் பொருளுக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் மேலும் ஒரு சில காவலர்கள் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு உடந்தையாக இருப்பதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது முழுமையாக தெரிந்து கொண்டு அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க விட்டால் கடுமையான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து போதைப்பொருள் கீழக்கரையில் விற்பனையை கட்டுப்படுத்தவில்லை என்றால் கீழக்கரையில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களில் அணிவகுப்போடு சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். கீழக்கரையில் போதை பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் இளைஞர்கள் அழிவை நோக்கி செல்கின்றனர் இதை கீழக்கரை திமுக நகர் நிர்வாகிகள் கண்டும் காணாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கிறேன் என்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் போதைப்பொருள் விற்பனையாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் தெற்கு மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்டத்துணைச் செயலாளர்கள் உஸ்மான், மீரான் மற்றும் அனைத்துக்கிளை நிர்வாகிகள் உட்பட ஐயாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்ட செயலாளர் தினாஜ்கான் நன்றி உரை வழங்கினார்.








Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









