ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் அலுவலகங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் பழனி குமார் அறிவித்துள்ளார் அவர் செய்தி குறிப்பின் தெரிவித்ததாவது. மாவட்டத்தில் இதுநாள் வரை காலம் காலமாக வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்குவதில் முதுநிலைப்படி வழங்கி வந்த சூழ்நிலையில் தற்பொழுது முதுநிலையினை தவிர்த்து விரும்பும் நபர்களுக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்து முதுநிலைப்படி பணியிடம் வழங்கப்படவேண்டும் என்றும் ,கீழ்நிலை அலுவலர்கள் செய்ய மறுத்த பணியினை வருவாய் ஆய்வாளர் முன்னின்று செய்து முடித்த பின்னர் எவ்வித விளக்கமும் பெறாமல் தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்துசெய்யப்பட வேண்டும் என்றும் ,தற்காலிக பணிநீக்க ஆணையினை வீட்டின் சுவர்முன்பு ஒட்டி வருவாய்த் துறையினரை அவமானப்படுத்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 03.02.2023 முதல் நடைபெறும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக நாளை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்தில் கையொப்பமிட்டு பணிப்புறக்கணிப்பு செய்து அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்தின் இடத்திலேயே அமர்ந்து தொடர் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.