சென்னை வருவாய் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த வருவாய் துறையினர் ! பொதுமக்கள் பாதிப்பு !! அரசு அழைத்துப் பேச சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் !!!

சென்னையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சுமார் 5000 வருவாய்த்துறை அலுவலர்கள் வருவாய் ஆணையர் அலுவலகம் முன்பாக முகாமிட்டு இன்று முதல் (07.03.2024) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளான மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி மூன்று கட்ட போராட்டங்களை அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையான அனைத்து நிலை அலுவலர்களும் இரவு பகலாக தொடர் காத்திருப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் அரசு இதுவரை அழைத்து பேசாத காரணத்தினாலும் , அரசின் அலட்சியத்தால் சென்னையில் குவிந்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வருவாய்துறை சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் போராட்டம் நீடிக்காமல் அரசு உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி அழைத்துப்பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என பல பொதுநல அமைப்புகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!