தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் எழுச்சியாகத் தொடர்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அநேக கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படாததால், வருகின்ற திங்கள் கிழமை (04.03.2024) மாலை 5.00 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், மாவட்ட தலைநகரில் ஒட்டுமொத்த வருவாய்த்துறை அலுவலர்களும் இரவு பகலாக தொடர்ந்து காத்திருப்பது எனவும் முடிவு செய்யப்பட்ள்ளது. அதிலும் முடிவு எட்டப்படவில்லையெனில் சென்னை வருவாய் நிர்வாகஆணையர் அலைவலகம் முன்பாக 14000 வருவாய்த்துறை அலுவலர்களும் இரவுபகலாக காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனி குமார் செய்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.