ராமநாதபுரம் மாவட்டம் சந்தை திடலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் மீலாது நபி விழா சமய நல்லிணக்க மாநாடு அகமது இப்ராஹிம் மிஸ்பாஹி மற்றும் முகமது ஜலாலுதீன் அன்வாரி தலைமையில் வட்டார ஜமாஅத் உலமா சபைகள் முன்னிலையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் இஸ்லாம் சமுதாயம் மத நல்லிணக்கத்தையும் சமூக நல்லினத்தையும் ஒற்றுமையும் பேணி பாதுகாக்கும் மார்க்கம் என்று விளக்க உரை வழங்கப்பட்டது.

மாவட்ட அரசு தலைமை காஜி சலாவுதீன் ஜமாலி பாஜில் உமரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

கீழக்கரை வட்டார ஜமாத் உலமா சபை தலைவர் அப்பாஸ் அலி வாழ்த்துரை வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட ஜமாத் உலமா சபை ஒருங்கிணைப்பாளர் முகமது அப்துல்லா அன்வாரி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஜமாத்தார்கள் உலமாக்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..

Like this:

Like Loading...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!