பழனியில் பல மாதங்களாக பூட்டி கிடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் கோர்ட் உத்தரவின் பேரில் மீண்டும் திறப்பு..
பழனி ரயில்வே பீடர் சாலையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு சொந்தம் எனக்கூறி இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அலுவலகம் தமாக விற்கு சொந்தம் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. த.மா.க மூத்த தலைவர் N.S.V. சித்தன் அலுவலகத்தை திறந்து வைத்து கட்சிக் கொடி ஏற்றினார். இந்நிகழ்வில் தமாகா மாவட்ட தலைவர் ராசியப்பன், நகர தலைவர் சண்முகநாதன் மற்றும் மாநில செயலாளர் வழக்கறிஞர் மணிக்கண்ணன், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், பாமக மாவட்ட தலைவர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.