நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் நூலக வாசகர் வட்டம் சார்பில் “தமிழ் பேசுவோம் தமிழால் இணைவோம்” நிகழ்ச்சி வாசகர் வட்ட தலைவர் பீ. ஆதம் இல்யாஸ் தலைமையில் நூலக அரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில், வாசகர் வட்ட சாதனை பொன் விழா மலர் நூல் திறனாய்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் பீ. ஆதம் இல்யாஸ் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட நிர்வாகிகள் மருத்துவர் மா. முத்து ராமலிங்கம், சொ.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாத்திலிங்கம் வரவேற்றார்.
இறை தமிழ் என்ற தலைப்பில் ஐ.என்.டி.யு.சி. சு.கிருஷ்ணன், இலக்கிய தமிழ் என்ற தலைப்பில் பாரதி கவி முற்றத் தலைவர் புலவர் கி. முத்தையா, இசைத்தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் க. உலக நாதன், வாசகர் வட்ட பொருளாளர் ச.பெரியார் பித்தன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்பாக்குடி. அ. முருகன் நிறை தமிழ் என்ற தலைப்பிலும், ஆழ்வார் குறிச்சி நல்லாசிரியர் மாடசாமி தமிழில் நின்று பேசுவோம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்வில், வாசகர் வட்ட சாதனை பொன் விழா மலர் நூல் திறனாய்வு செய்யப்பட்டது. வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பழனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சென்னை குளோபல் ஸ்கூல் ஆஃப் யோகா நிறுவனத்தாரால் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வாசகர் வட்ட நிர்வாகி யோகா வெங்கடேஷ் பாராட்டப்பட்டார். பிடித்ததை பேசுவோம் என்ற தலைப்பில் கவுன்சிலர் அனந்தராமன் வைரவன், பூ.பெருமாள், மீனாட்சி சுந்தரம், ஆட்டோ குமார் உட்பட பலர் பேசினார்கள். வாசகர் வட்ட செயலாளர் ரா.சந்திரசேகர் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.