கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நிலத்தை தானமாக வழங்கிய செல்வந்தர்..
மறைந்தும் கொடை கொடுத்த வள்ளல் சீதக்காதி வாழ்ந்த ஊர் என்று பெயர் பெற்ற ஊர் கீழக்கரை. தற்சமயம் கீழக்கரையில் பயன்பாட்டில் இருக்கும் இராமநாதபுரம்-கீழக்கரை நெடுஞ்சாலையில் இருந்து, நகராட்சி அலுவலகம், முக்கிய தபால் நிலையங்கள் போன்ற அனைத்து அரசாங்கம் செயல்பாடுகளுக்கும் நிச்சயமாக கீழக்கரையில் உள்ள முக்கிய தன்வந்தர்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது.

அதுபோல் கீழக்கரையும் இன்று உலகளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் இருக்கும் ஊராக விளங்க முக்கிய காரணம் தன்வந்தர்கள்தான். அக்கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்வது மட்டுமல்லாமல் தேவை உடையவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வருவதும் செல்வந்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் அறக்கட்டளைகள் மூலம் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளும், கல்லூரிகளும்தான் என்றால் மிகையாகாது.
அந்த வரிசையில் இன்று கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு தனி அலுவலகம் அமைக்க ஸ்டார் குழுமத்தின் தலைவர் சலாஹுதீன் கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் முனியசாமி கோயிலுக்கு எதிர்புறமாக தோட்டப்பகுதியில் உட்புறமாக பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை கீழக்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் தமிழக கவர்னர் பெயருக்கு பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
மீண்டும் கீழக்கரை ஊரின் தேவைகளைய நிவர்த்தி செய்து கொள்ளும் அரசாங்கத்தை முழுமையாக எதிர்பார்க்காத தன்னிறைவு பெற்ற ஊராக தலை நிமிர்ந்து நிற்கிறது.


Ithellam oru business technique. Ippo avaroda micham ulla nilathukku value jasthi ayidum.