டாஸ்மாக்கை மூடக்கோரி மேட்டுப்பாளையத்தில் CITU தொழிற்சங்கம் சார்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு மிக வேகமாக பரவி வரும் அபாயகரமான சூழலில்., அத்தியாவசியக் கடைகளையும்., பல தொழில்களையும் முடக்கி விட்டு., அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கு அல்லல்படும் சாலையோர சிறு வியாபாரிகளைக் கூட கடைபோட விடாமல் ஆயிரத்தெட்டு பாதுகாப்பு காரணங்கள் சொல்லும் காவல்துறையும் தமிழக அரசும்., திடீரென்று டாஸ்மாக்கை இன்றுமுதல் திறக்க உத்தரவிட்டதன் மூலம் ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடுவதோடு மட்டுமல்லாமல்.,தமிழ்நாட்டு பெண்கள் தாலியை இழக்கும் அபாயாத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது.இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து இழுத்து மூடு இழுத்து மூடு டாஸ்மாக்கை இழுத்து மூடு என்ற கோசங்கள் விண்ணதிர மேட்டுப்பாளையம் CITU பொது தொழிலாளர் சங்கம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் கருப்புக் குடைகளுடன்,கருப்பு பதாகை ஏந்தியும், செங்கொடிகளுடன்,சமூக இடை வெளியை கடை பிடித்து மேட்டுப்பாளையம் தாலுக்கா பொது தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் S.பாஷா தலைமையில் தொழிலாளர்கள் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


You must be logged in to post a comment.