பூரண மது விலக்கை அரசு அறிவிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்!
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய உயிரிழப்புகள் அதிகமாக இருக்கக் கூடிய சூழலை விளங்கி அரசு ஊரடங்கு என்று அறிவித்தது.
அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விளங்கி மக்கள் தங்களுடைய வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளையும், வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்ய இயலாத அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி தளர்த்தப்பட்ட சூழலிலும் உயிர்பலி அதிகம் ஏற்படுத்தக்கூடிய நாட்டையும் வீட்டையும் கெடுக்கக் கூடிய மதுக்கடைகளை திறக்க உள்ளது.
இரண்டு மாத காலங்கள் குடிக்காமல் பயிற்சி எடுத்த அந்த மக்களுக்கு மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தருவது கடுமையான கண்டனத்திற்குரியது.
அவர்கள் திருந்தினார்கள் என்று குடும்பத்தார்கள் மகிழ்ச்சியோடு இருந்த நிலையில் இன்று மதுக்கடைகளை திறக்க அரசு போட்ட உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு ஊரடங்கு தளர்த்தியது எப்படி??
சிறு, குரு தொழில்களுக்கு தடை, வணிக வளாகங்கள் திறக்க தடை, சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டு பாடு, வணக்க வழிபாட்டு தளங்கள் திறக்க தடை. விமான போக்குவரத்துக்கு தடை, மாநிலங்கள் போக்குவரத்து தடை
என்று பல முக்கியமான செயல்களுக்கெல்லாம் தடைவிதித்தது.
நன்மை தரும் காரியங்களையே மக்கள் நலனுக்காக தடை விதித்த அரசு, மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மதுக்கடைகளுக்கு கட்டாயம் தடை விதிக்க வேண்டும்.
மது குடிக்காமல் இரண்டு மாதம் நீண்ட பயிற்சி எடுத்த மக்களுடைய அந்த விஷயத்தில் அக்கரை செலுத்தி பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மக்களின் நலன் மீது அக்கரை உள்ள அரசு என்றுதான் மக்கள் பல சிரமங்களை தாங்கி வீடுகளில் இருந்து வருகிறார்கள். அதே போல் உயிர் குடிக்கும் இந்த மதுவை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
இப்படிக்கு, இ. முஹம்மது, மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.


You must be logged in to post a comment.