பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தமிழக அரசு மது கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக அரசு உத்தரவின்படி மே 7ம் தேதி மதுபான கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் அவரவர் வீட்டின் அருகில் விளம்பர பதாகைகளை ஏந்திக் கொண்டு சமூக விலகலை கடைபிடித்து கண்டனம் தெரிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் ஏழை எளிய மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மதுபான கடைகள் திறப்பது அவர்களுக்குக் கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசு செயல்படுகிறது எனவும் , மதுக்கடைகளை திறக்காதே மக்களைக் கொல்லாதே கொரோணா நோயை பரப்பாதே, குடிகெடுக்கும் திட்டத்தை கைவிடு , போன்ற பல்வேறு கோஷங்களை முழக்கமிட்டு கண்டனங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
A. சாதிக் பாட்சா, நிருபர் தேனி மாவட்டம்


You must be logged in to post a comment.