சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் SYNERGY INTERNATIONAL GROUP OF COMPANY, கல்வித் துறைச் சார்ந்த பணிகள் மற்றும் ஹஜ், உம்ரா போன்ற சேவைகளும் செய்து வருகின்றனர். சமீபத்தில் கீழக்கரையிலும் இந்நிறுவனத்திற்கான கிளை ஆரம்பம் செய்யப்பட்டது.
இந்நிறுவனம் சார்பாக தமிழகம் தழுவிய மாபெரும் கட்டுரைப்போட்டி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, அப்போட்டியில் நூற்று கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா வரும் ஜனவரி 30ம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள சென்னை கேட் ஹோட்டலில் மாலை 04.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து வியாபாரத்தில் வாய்ப்புள்ள துறைகள் பற்றி “BUSINESS OPPORTUNITY MEEY” எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தொழில் துறையில் அனுபவம் வாய்ந்த நபர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற SYNERGY INTERNATIONAL GROUP நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











