சிறந்த சமூக பணிக்கான விருதை பெற்ற சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமம்.

சென்னையை மையமாக கொண்டு பல பகுதிகளில் கிளைகளுடன் ஹஜ், உம்ரா சேவை, சமூக விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி சார்ந்த பணிகளில் சினர்ஜி இன்டர்நேசனல் (SYNERGY INTERNATIONAL GROUP) சமூக அக்கறையுடன் செயல்படுத்தி வருகிறது.

இந்நிறுவனத்தின் சமூக செயல்பாட்டினை அங்கீகரிக்கும் வண்ணம் சமூக பொறுப்புத் திட்டச் செயல்பாடுகளுக்கான (Corporate Social Responsibility-CSR) சிறப்பு விருது ஜே.சி.ஐ மற்றும் வாசன் பதிப்பகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.

இந்த விருதை இண்டர்நேஷனல் குழுமத்தின் ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் மற்றும் மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங் ஆகிய வர்த்தக நிறுவனங்களுக்கு 26.11.2017 அன்று சேலம் ரோட்டரி அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வழங்க முனைவர் ஹுஸைன் பாஷா பெற்றுக் கொண்டார்.

சமூக வளர்ச்சியில் எமது குழுமத்தின் அர்ப்பணம் மிக்க சேவையை அங்கீகரித்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் ஜே.சி.ஐ மற்றும் வாசகன் பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இது போன்ற விருதுகள் வழங்கப்படுவதன் மூலமாக இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்ற இது ஊக்க சக்தியாக இருக்கும் என இக்குழுமத்தின் இணை நிறுவனர் பொறியாளர் கீழை.இர்பான் தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!