ராமநாதபுரம் செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகளுக்கான சிறப்பு முகாம் 20.02.2017 முதல் பனைக்குளம் ஊராட்சியில் நடைபெற்று வருகிறது.

இங்கு மாவட்ட முதலுதவி பயிற்றுனர் பரமக்குடி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எஸ். அலெக்ஸ் அவர்களால் மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிராமநாதபுரம் மாவட்ட கிளையின் செயலாளர் ஏ. ராக்லாண்ட் மதுரம் ரெட் கிராசின் மனித நேய பணிகள் பற்றியும் இலவச அமரர் ஊர்தி சேவை (FHS) மற்றும் இலவச தாய் சேய் நல ஊர்தி பற்றியும் மற்றும் பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவ பணி பற்றியும் விவரித்தார். NSS ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். யோகலக்ஷ்மி நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகரின் இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டியின் ஆயுட்கால உறுப்பினர் சமூக ஆர்வலர் பொறியாளர் டாக்டர் கே. எம். முரளி B.E., அவர்கள் பெருங்குளம் இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டி பகல் நேர மருத்துவமனையின் பிப்ரவரி மாத தேவைகளுக்காக ரூபாய் 6000/= மதிப்பிலான மருந்து பொருட்களை ராமநாதபுரம் மாவட்ட செயலாளரிடம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளையின் பொறுப்பாளர் அப்பா மெடிக்கல்ஸ் எஸ். சுந்தரம், ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி தாளாளர். முனைவர் B. சகுபர் சாதிக், பரமக்குடி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எஸ். அலெக்ஸ் மற்றும் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Thank u Sir, for publishing our RED CROSS RAMNAD News.