செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையின் வளர்ச்சி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின் சார்பாக 04.08.2017 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி கலையரங்கத்தில் நுண்ணுயிரியல் துறையின் வளர்ச்சி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று துவக்கி வைத்தார் அவர் பேசுகையில் “அறிவியல் வளர்ச்சிக்கு நுண்ணுயிரியல் துறை மிக முக்கியமான பங்கு வக்கிறது. இந்திய அளவில் பல்வேறு உணவு உற்பத்தித் தொழிற்சாலைகள், மருந்துகள்இ, நோய்த் தடுப்பு மருந்துகள் (vaccine) உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், விவசாயத்துறை, புரதம் மற்றும் நொதிகள் உற்பத்தி மையங்கள் மற்றும் வைட்டமின்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் தேவை அளப்பரியது. நுண்ணுயிரிகளின் பயன்பாடுகளானது, மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் வளர்சிதைமாற்றத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. தற்போது மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நானோ தொழில் நுட்பத்திலும் இந்நுண்ணுயிர்களை பயன்படுத்தி இதன் மூலம் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கி அம்மருந்துகளின் மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து சிறந்த முறையில் நோயுற்றவர்களை காப்பாற்றப்பட்டு வருகிறது. மருத்துவத் துறைகளில் நுண்ணுயிரிகளின் மூலம் பல்வேறு நோய் எதிர்ப்புக் காரணிகளை உற்பத்தி செய்ய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

சிறப்பு விருந்தினர்களாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூலக்கூறு நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் Dr.N.சிவக்குமார் மற்றும் துபாய் மாராவா உயிர்க்கோள காப்பாகத்தின் கடல் பாலூட்டிகளின் வளர்ச்சி கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனா. இதில் சிறப்பு விருந்தினர் R.சிவக்குமார் அவர்கள் எதிர்காலத்தில் நுண்ணுயிரியல் துறையானது மருத்துவத் துறை, விவசாயத்துறை மற்றும் தொழிற்துறைகளில் ஏறபடுத்தவிருக்கும் முன்னேற்றங்கள் குறித்து மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் செந்தில்குமார் அவர்கள் கடல் பகுதிகளில் காணப்படும் பவளப் பாறைகளின் தோற்றம்இ வளர்ச்சி மற்றும் அவற்றின் வகைகள் குறித்தும், பவளப்பாறைகளின் முக்கியத்துவம், கடல் நுண்ணுயிரிகளின் உற்பத்திஇ வளர்ச்சி மற்றும் இனப்பெருக்த்தில் பவளப்பாறைகளின் பங்கு பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியின் முன்னதாக நுண்ணுயிரியல் துறைத் தலைவர் ஆனந்த் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதுகலை வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் வேதியியல் துறைத் தலைவர் அப்துல் சர்தார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நுண்ணுயிரியல் மற்றும் வேதியியல் துறை மாணவ மாணவியர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இறுதியாக நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ஷோபனா நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நுண்ணுயிரியில் துறை பேராசிரியர்கள முகம்மது இப்ராஹிம் மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!