அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிடையே நடந்த பூப்பந்தாட்ட போட்டி டாக்டர் ஜாகிர் உசைன் கல்லூரி இளையான்குடியில் நடந்தது. அதில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி மற்றும் பல கல்லூரிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் கீழக்ரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் இரண்டாம் இடம் பெற்று Runners பட்டத்தை பெற்றது. இக்கல்லூரி வரலாற்றில் இது முதல் முறையாகும்.

பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் க.தவசி லிங்கம் மற்றும் வெற்றி பெற்ற அணி வீரர்கள் அனைவரையும் முகமது சதக் அறக்கட்டளை சேர்மன் யூசுப், செயலாளர் சர்மிளா , இயக்குனர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் E.இரபுதீன் ஆகியோர் பாராட்டினார்கள்.


You must be logged in to post a comment.