கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘பன்றிக்காய்ச்சல்’ குறித்த விழிப்புணர்வு பேனர் வெளியீடு

தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேனர் தயார் செய்யப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இதனை பள்ளியின் மாணாக்கர்கள் படித்து விழிப்புணர்வு பெரும் வகையில் பள்ளிகளின் சுவர்களில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் வாசித்து விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்.

முதலாவதாக இந்த விழிப்புணர்வு பேனர் வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக இன்று 23.02.2017 வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஹாஜா அனீஸ் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேனரை வெளியிட, அதனை முஹைதீனியா கல்விக் குழுவின் துணை தலைவர் M.M.S. முஹைதீன் இபுராஹீம் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர், முஹைதீனியா கல்விக் குழுவின் பொருளாளர். சேகு பஷீர் அஹமது, முஹைதீனியா கல்விக் குழுவின் செயலாளர் டாக்டர் ராசிக்தீன், இணை செயலாளர். சட்டப் போராளி அஹமது மிர்ஷா, பள்ளியின் முதல்வர் சேகு சஹபான் பாதுஷா, மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளர், கீழக்கரை மக்கள் களத்தின் துணை தலைவர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழகத்தில் கடந்த 2009-10ம் ஆண்டுகளில் பன்றிக்காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமி) தீவிரமாக காணப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அந்த காலகட்டத்திலும் கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக விழிப்புணர்வு பேனர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!